தளி அருகே விவசாயியை அடித்து கொன்ற வழக்கில் தாய்-மகன் கைது
தளி அருகே விவசாயியை அடித்து கொன்ற வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
தளி,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஜே.என் பாளையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி செல்வி என்கிற திருவளர்செல்வி (43). இவருக்கு சக்திவேல்குமார்(22) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகனுக்கு திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக கோதண்டசாமி கடந்த சில மாதங்களாக அவரது மகன் மற்றும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.
இதையடுத்து சக்திவேல்குமார் தந்தையிடம் சொத்தை எழுதிக்கேட்டு பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோதண்டசாமி சொத்தை மகனுக்கு எழுதித்தராமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை சொத்து சம்மந்தமாக தந்தைக்கும்- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அருகில் கிடந்த தடியை எடுத்து தந்தையின் பின்புற தலையில் பலமாக தாக்கினார். இதனால் நிலைகுழைந்த கோதண்டசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து பலியானார். இதையடுத்து சக்திவேல்குமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோதண்டசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோதண்டசாமி கொலை வழக்கில் தலைமறைவான சக்திவேல்குமாரை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன் சாந்தி (தளி கூடுதல் பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார் (அமராவதி), சிவராஜ்(தளி ), உள்ளிட்ட தனிப்படை போலீசார் சக்திவேல்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜே.என்பாளைம் பகுதியில் பதுங்கி இருந்த சக்திவேல்குமாரை கைது செய்தனர். அப்போது சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க மறுத்த தந்தையை தாய் திருவளர்செல்வியுடன் சேர்ந்து அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது தாயையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் கோதண்டசாமியை மனைவியும் மகனும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story