துணை தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


துணை தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

துணை தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை தாசில்தார் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளை கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 40-க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்ட கிளைத்தலைவர் தீபன் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதேபோல புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு வித்யா தலைமை தாங்கினார்.

தாலுகா அலுவலகங்களில்...

அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு வருவாய் முதுநிலை அலுவலர் செந்தில்குமார், மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் வட்ட தலைவர் முத்து கணேஷ், திருமயம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பணிகள் பாதிப்பு

கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு தாசில்தார் வில்லியம்மோசஸ் தலைமை தாங்கினார். விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு கொடும்பாளூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி தலைமை தாங்கினார். இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருமலை தலைமை தாங்கினார்.

குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் அருண்குமார் தலைமையிலும், பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வட்ட தலைவர் துரை தலைமையிலும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கமாக நடைபெறும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Next Story