பர்கூர் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பர்கூர் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பர்கூர்,

பர்கூர் அருகே பட்டலப்பள்ளி பக்கமுள்ள பூசிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ரேகா (வயது 23). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ரேகா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதையறிந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ரேகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 3 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி மற்றும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story