வருங்கால சந்ததியினர் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


வருங்கால சந்ததியினர் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

வருங்கால சந்ததியினர் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வாளவாய்க்கால் பகுதியில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் தொடர்பான சிரமதான பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்று பணியினை தொடங்கி வைத்தார். அதுசமயம் நாகை செல்வராஜ் எம்.பி., ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் ஆனந்த, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீர் நிலைகள்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசால் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன்படுத்தாமல் இருப்பதோடு மற்றவர்களும் பயன்படுத்தாமல் இருக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் வசிக்கும் இடம், சுற்றுப்புறம் மற்றும் நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்டால் உடன் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். நகரினை தூய்மையாக வைத்திட கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்ப்பதோடு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிந்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் சந்தானம், உதவி கலெக்டர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story