காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

காமராஜ்ந்கர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது.

புதுச்சேரி,

புதுவை காமராஜ்நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் என ஒட்டுமொத்தமாக 12 வேட்பாளர்கள் 18 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடந்தது.

இதில் ஜான்குமார் (காங் கிரஸ்), புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்கிரஸ்), வெற்றிசெல்வம், செண்பகவள்ளி (மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்), பிரவீனா, தேவிகா (நாம் தமிழர்), கோவிந்தராஜ் (அகில இந்திய மக்கள் கழகம்), லெனின்துரை (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா), பார்த்தசாரதி (மக்கள் விடுதலை கட்சி), சகாயராஜ், சுகுமாறன் (சுயேட்சைகள்) ஆகிய 11 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஜார்ஜ் அகஸ்டின் என்பவர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மனுக்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணி வரை வாபஸ் பெறலாம். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படுகிறது. சுயேச்சைகள் உள்பட அனைத்து வேட்பாளர் களுக்கு சின்னமும் ஒதுக்கப் படுகிறது.

Next Story