நொய்யல்-லாலாபேட்டை பகுதிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்


நொய்யல்-லாலாபேட்டை பகுதிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல்-லாலாபேட்டை பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடை பெற்றது.

நொய்யல்,

காந்திஜெயந்தியையொட்டி கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் குந்தாணிபாளையத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்யா தலைமை தாங்கினார். நொய்யல் கால்நடைமருத்துவர் உ‌ஷா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முத்துசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீர்மேலாண்மை திட்டத்தின்கீழ் குடிமராமத்து பணிகள் செய்தல், டெங்கு காய்ச்சலைத் தடுத்தல், ஊட்டச்சத்து இயக்கம் குறித்து எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல், மகாத்மா காந்தி தேசியஊராக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோம்புப்பாளையம் ஊராட்சி

இதேபோல் கோம்புப்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் (மகளிர்) சிரும்பாயி தலைமையிலும், ஊராட்சி செயலர் அனிதா வரவேற்று பேசினார். இதேபோல் திருக்காடுதுறை ஊராட்சியில் செயலர் ரமே‌‌ஷ் தலைமையிலும், புன்னம் ஊராட்சியில் செயலர் சிவக்குமார் தலைமையிலும், என்.புகளுர் ஊராட்சியில் செயலர் ஆறுமுகம் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பிளாஸ்டிக் ஒழிப்பு

கிரு‌‌ஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி முதல்நிலை ஊராட்சியில் நேற்று கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி முதலில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து முழுசுகாதாரம், டெங்கு விழிப்புணர்வு, திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்தல் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி செயலாளர் லெட்சுமணன் 2018-19-ம் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார். இதேபோல் கருப்பத்தூர் ஊராட்சி, பஞ்சப்படி ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

Next Story