முன்னாள் ராணுவ வீரர் கொலையில் 3 பேர் கைது 3 பேர் கோர்ட்டில் சரண்


முன்னாள் ராணுவ வீரர் கொலையில் 3 பேர் கைது 3 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 3 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கந்தம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். இவர் அரசு டெண்டர் எடுத்து கழிவறை கட்டி தரும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமிக்கும், திருவண்ணாமலையில் உள்ள அவரது நண்பர் செந்தில்குமாரின் மனைவி சரண்யா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சம்பவத்தன்று பெரியசாமி மாயமானார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள். போச்சம்பள்ளி அருகே உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சென்னப்பன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்கள். அதில் பெரியசாமியை வாடகை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி அவரை கொன்றது தெரிய வந்தது. மேலும் அவரது உடலை திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி அருகே உள்ள நரிப்பள்ளி கிராமத்தில் சாலையோரத்தில் புதைத்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது தெரிய வந்தது.

கோர்ட்டில் சரண்

இதைத் தொடர்ந்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று அங்கு புதைக்கப்பட்ட பெரியசாமியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை கூலிப்படையை சேர்ந்த சரவணன், தவமணி ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இதில் கூலிப்படையை சேர்ந்த சிவலிங்கம், செல்வம் ஆகிய 2 பேரும் ஊத்தங்கரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சென்னப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீஸ் தேடி வந்த செந்தில்குமார் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார்.


Next Story