காஞ்சீபுரம் அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை


காஞ்சீபுரம் அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கரூர் கிராமம் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 43). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் முருகன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் மனவருத்தம் அடைந்த முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார்.

உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருந்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி அஞ்சுகம் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story