பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அரசு பள்ளி மாணவிகளுக்கு துணிப்பை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது


பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அரசு பள்ளி மாணவிகளுக்கு துணிப்பை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் கெடுதல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமில் 3 ஆயிரம் மாணவிகளும், 180 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய வாழை இலைகள், பாக்கு மர தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம் அதன் வாழ்க்கை சுழற்சி, அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 4 ஆயிரத்து 100 துணிப்பைகள் வழங்கப்பட்டது.

அனைவரும் பிளாஸ்டிக் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story