மெரினாவில் அழுக்கடைந்து காணப்பட்ட காமராஜர் சிலையை சுத்தம் செய்த சமத்துவ மக்கள் கட்சியினர்


மெரினாவில் அழுக்கடைந்து காணப்பட்ட காமராஜர் சிலையை சுத்தம் செய்த சமத்துவ மக்கள் கட்சியினர்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலை அழுக்கடைந்து காணப்பட்டது. இந்தநிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் காமராஜரின் சிலையை சுத்தம் செய்தனர்.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜரின் நினைவுதினம் நேற்றுமுன்தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலை அழுக்கடைந்து காணப்பட்டது. யாரும் அவருடைய சிலையை கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் உத்தரவுக்கிணங்க அக்கட்சி நிர்வாகிகள் காமராஜரின் சிலையை சுத்தம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆர்.சரத்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெரினா கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலை சரியாக பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்த நிலையில் உள்ளது என்று தெரிய வந்தது. காமராஜரின் சிலையை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சேவியர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளை சுத்தம் செய்யுமாறு கூறினேன். இதனையடுத்து அவர்கள் காமராஜர் சிலையை சுத்தம் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள்.

தலைவர்களை, அவர் பெருமைகளை தொடர்ந்து போற்றுவதற்கு முக்கிய காரணம் அவர்களின் வழிகாட்டுதலில் அடுத்து வரும் சமுதாயம் முன்னேற வேண்டும். சிலைகள், நினைவிடங்கள் அதற்கு நினைவூட்டலாக அமையும். எனவே தலைவர்களின் சிலைகளை அனைவரும் போற்றி பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story