பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை,
உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்துறையின் மூலம் ஆழியாறு உபவடி நிலப்பகுதிகளில் மீன்குஞ்சு வளர்த்தல் மற்றும் மீன் வளர்த்தல், பண்ணை மற்றும் பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்புக்கு உள்ளட்டு மானியம் வழங்கப்பட உள்ளது.
ஆழியாறு உபவடி நிலப்பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தபட்சம் 0.5 ஹெக்டேர் சொந்த நிலமும், நல்ல நீர் வசதியுள்ள நபர்களுக்கு மீன்குஞ்சு வளர்த்தல் மற்றும் மீன் வளர்த்தல் பண்ணைக்காக மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்தில் 75 சதவீதம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஆகியவை மூலம் குறைந்தது 1,000 சதுர மீட்டர் அளவில் ஏற்கனவே வெட்டப்பட்ட பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு செய்வதற்காக உள்ளட்டு மானியம் 100 சதவீதத்தில் மீன்குஞ்சுகள் மற்றும் தீவனம் வழங்கப்பட உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் ஒரு வார காலத்திற்குள் வேலூர் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகர், காட்பாடி, வேலூர் -632 006 என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் அலுவலகத்தின் மின்னஞ்சல் ad-f-i-fv-e-l-l-o-re@gm-a-il.com என்ற முகவரியையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story