திருவண்ணாமலையில் 2,191 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
திருவண்ணாமலையில் 2,191 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் பட்டம் படித்த பயனாளிகள் 1,139 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் 10, 12-ம் வகுப்பு படித்த பயனாளிகள் 1,052 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என 2,191 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும், ரூ.6 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கத்தையும் அமைச்சர் வழங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட பேரவை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் அமுதா, நகர செயலாளர் செல்வம், அச்சக கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன், ஒன்றிய செயலாளர் குமாரசாமி, ஜெயபிரகாஷ், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி, ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் இல.மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆரணி, போளூர், வந்தவாசி, கலசபாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,103 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி பேசினார்.
Related Tags :
Next Story