ஆசைவார்த்தை கூறி பெண் டாக்டர் பலாத்காரம்: திருமணம் செய்ய மறுத்த மதுரை டாக்டருக்கு போலீசார் வலைவீச்சு
ஆசைவார்த்தை கூறி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக மதுரையை சேர்ந்த டாக்டரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
சேலம்,
சேலத்தில் மருத்துவக்கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்தார். அப்போது, மதுரையை சேர்ந்த அஸ்வின் என்பவரும் படித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை, அஸ்வின் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மருத்துவ படிப்பை முடித்த அஸ்வின், மதுரைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே, சென்னை மாணவியும் மருத்துவ படிப்பை முடித்து டாக்டர் ஆனார். அதன்பிறகு தனது காதலன் அஸ்வினை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் காதலித்ததை ஒப்புக்கொண்டனர். பெண் டாக்டரை 3 மாதத்தில் திருமணம் செய்து கொள்வதாக அஸ்வின் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர், அந்த பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மதுரை டாக்டர் அஸ்வின் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற அரசு டாக்டருமான சங்கர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மதுரைக்கு சென்று, அங்கிருந்த டாக்டர் சங்கரை பிடித்து கைது செய்தனர். அவரது மகன் அஸ்வின் தப்பி சென்றதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story