ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி


ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி
x
தினத்தந்தி 5 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நடந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரையில் நேற்று மாவட்ட சுற்றுச்சுழல் துறை, தேசிய பசுமைப்படை சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஜோசப் பள்ளியின் தலைமையாசிரியர் சூசை ரெத்தினம், நகராட்சி சுகாதார அலுவலர் முத்துக்குமார், தேசிய பசுமைப்படை மாவட்ட பொறுப்பாளர் பரமேசுவரன் மற்றும் வேர்க்கோடு பள்ளி, வேலு மாணிக்கம் கல்லூரியைச் சேந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடற்கரை பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியல் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கடற்கரை பகுதிகளில் குபபைகளை வீச மாட்டோம், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என்று அனைவரும் உறுதி மொழியும் எடுத்து கொண்டனர். இதே போல் ராமேசுவரம் பஸ் நிலைய நுழைவு பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு நின்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம், எந்தவொரு குப்பைகளையும் கடற்கரை, கடலில் வீச மாட்டோம், அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயகாந்தன், என்.சி.சி.ஆசிரியர் பழனிச்சாமி, ஆசிரியர் தினகரன், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார், விஞ்ஞானி ஜான்சன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், என்ஜினீயர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அது போல் சங்குமால் கட்கரையில் சுற்றுலா துறை சார்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. உதவி சுற்றுலா துறை அதிகாரி முத்துச்சாமி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

Next Story