புரசைவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல்


புரசைவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 8:03 PM GMT)

புரசைவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திரு.வி.க.நகர்,

பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள தமிழக போக்குவரத்து துறையின் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் சென்னை ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் உள்ள புரசைவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story