தூத்துக்குடியில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தவரால் பரபரப்பு


தூத்துக்குடியில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வண்ணார் 3-வது தெருவை சேர்ந்தவர் வேல்மயில் (வயது 45). பிளம்பர். இவர் நேற்று மாலையில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பீங்கான் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளை நடுரோட் டில் நிறுத்திவிட்டு சத்தமாக யாரையோ திட்டிக்கொண்டு இருந்தார். பின்னர் சட்டையை கழற்றி மோட்டார் சைக்கிள் மீது போட்டு, திடீரென தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் வேல்மயிலுக்கு மோட்டார் வாகன சட்டப்படி போலீசார் அதிகளவில் அபராதம் விதித்த தால், அவர் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த தாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

குடும்பத்தகராறு காரண மாக வேல்மயில் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story