பாலியல் தொல்லை செய்து 2 வயது சிறுமி கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு


பாலியல் தொல்லை செய்து 2 வயது சிறுமி கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை செய்து 2 வயது சிறுமியை கொலை செய்த வாலிபருக்கு ஐகோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

மும்பை, 

பாலியல் தொல்லை செய்து 2 வயது சிறுமியை கொலை செய்த வாலிபருக்கு ஐகோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

சிறுமி கடத்தல்

அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ரவி குமாரே(வயது33). இவர் சம்பவத்தன்று தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்தார். பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து அங்குள்ள புதரில் வீசி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அங்கு உள்ள போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி குமாரேவை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை அவுரங்காபாத் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் ரவி குமாரே மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு தூக்குதண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது

இந்த தண்டனையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரவி குமாரே மேல்முறையீடு செய்திருந்தார். மும்பை ஐகோர்ட்டும் அவரது மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இதன் பின்னர் ரவி குமாரே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு ஆகும். சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்து கொலை செய்த ரவி குமாரே மீது கருணை காட்டினால் நீதிக்கு பங்கம் விளைவிப்பதாக ஆகிவிடும்.

எனவே மும்பை ஐகோர்ட்டு வழங்கிய தூக்குதண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறோம். மேலும் அவரது மேல்முறையீடு மனுவையும் நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.

Next Story