காங்கேயம் பகுதியில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்


காங்கேயம் பகுதியில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் நடக்கும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி செல்லும் சாலையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதியில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து பணிகளை கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை செம்மை படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் ஆழியாறு வடிநில கோட்டத்தின் வாயிலாக 53 பணிகள் ரூ.6 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், திருமூர்த்தி கோட்டத்தின் வாயிலாக 54 பணிகள் ரூ.4 கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், பவானி வடிகால் கோட்டத்தின் வாயிலாக 5 பணிகள் ரூ.86 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், மராமத்து பணிகள் நடக்கிறது.

அமராவதி வடிகால் கோட்டத்தில் 22 பணிகள் ரூ.3 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் குடிமராமத்து பணிகள் நடக்கிறது. இதை தவிர ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சி பகுதிகளில் 874 குளங் கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டருடன் காங்கேயம் உதவி செயற் பொறியாளர் அசோக்பாபு, உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், ஜெகதீஷ், கோகுலகிருஷ்ணன், வடிவேல், காங்கேயம் தாசில்தார் புனிதவதி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story