திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் - கலெக்டர் ஆனந்த் வெளியிட்டார்


திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் - கலெக்டர் ஆனந்த் வெளியிட்டார்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:45 PM GMT (Updated: 4 Oct 2019 9:40 PM GMT)

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வர்க்காளர் பட்டியலை கலெக்டர் ஆனந்த் வெளியிட்டார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் வார்டு வாரியான வாக்காளர் விவரங்கள் உள்ளடங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்கள் ஊரக பகுதியை பொறுத்தவரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சியை பொறுத்தவரை அந்தந்த அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கமல் கிஷோர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சேகர், நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிரு‌‌ஷ்ணமூர்த்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து ஊரக மற்றும் நகர்புற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story