தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாக்காளர் பட்டியலை தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மலர்விழி வெளியிட்டார். இதன்படி தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 22,616 ஆண்கள், 23,463 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 46,081 வாக்காளர்கள் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளில் 59,855 ஆண்கள், 61,438 பெண்கள், 6 இதரர் என மொத்தம் 1,21,299 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 2,343 வார்டுகளில் 5,32,914 ஆண்கள், 5,09,242 பெண்கள், 116 இதரர் என மொத்தம் 10,42,272 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 2,535 வார்டுகளில் 6,15,385 ஆண் வாக்காளர்களும், 5,94,143 பெண் வாக்காளர்களும், 124 இதரர் வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,09,652 ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சரவணன் (உள்ளாட்சி தேர்தல்), சந்தானம் (வளர்ச்சி), பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரபாகர் நேற்று வெளியிட்டார். அதில் ஓசூர் நகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சி, 333 ஊராட்சி ஒன்றியங்களில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 978 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 53 ஆயிரத்து 136 பெண் வாக்காளர்கள், 230 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 26 ஆயிரத்து 344 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டி யல்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Next Story