உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்பட்டியல் வெளியீடு; மதுரை மாவட்டத்தில் 26 லட்சம் வாக்காளர்கள்
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை,
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தேர்தலுக்காக வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலையே உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
எனவே இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விடுமுறையில் இருப்பதால், மாநகராட்சி கமிஷனர் விசாகன், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டனர். அதில் மாநகராட்சி துணை கமிஷனர் நாகஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வானதி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் பழனிசாமி, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். அதில் மதுரை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 265 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 80 ஆயிரத்து 870 ஆகும். பெண்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 874 ஆகும். திருநங்கைகள் 110 ஆகும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
* மதுரை மாநகராட்சி 4 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் மொத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 87 ஆயிரத்து 508 ஆகும். அதில் ஆண்கள் 6 லட்சத்து 35 ஆயிரத்து 548. பெண்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 879 ஆகும். திருநங்கைகள் 81 ஆகும்.
* மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகளில் 78 வார்டுகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 233 ஆகும். அதில் ஆண்கள் 53 ஆயிரத்து 68. பெண்கள் 56 ஆயிரத்து 162 ஆகும். திருநங்கைகள் 3 ஆகும்.
* அ.வள்ளாலபட்டி, அலங்காநல்லூர், எழுமலை, பாலமேடு, பரவை, பேரையூர், சோழவந்தான், டி.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 144 வார்டுகளில் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 796 ஆகும். அதில் ஆண்கள் 55 ஆயிரத்து 241. பெண்கள் 57 ஆயிரத்து 553. திருநங்கைகள் 2 ஆகும்.
* 420 கிராம பஞ்சாயத்துகளில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு, 214 ஊராட்சி ஒன்றிய வார்டு, 3 ஆயிரத்து 273 கிராம ஊராட்சி வார்டுகளில் மொத்தம் 10 லட்சத்து 85 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 37 ஆயிரத்து 13 ஆகும். பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 48 ஆயிரத்து 280 ஆகும். திருநங்கைகள் 24 ஆகும்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அனைத்து கிராமத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். அதில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை பட்டியலில் சேர்க்க மனு கொடுக்கலாம். மேலும் தேர்தலுக்காக 3 ஆயிரத்து 562 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிராம பஞ்சாயத்துகளில் வாக்கு பெட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 7 ஆயிரத்து 680 மின்னணு எந்திரங்கள் மாநகராட்சி பில்லர் ஹாலில் தயார் நிலையில் உள்ளன.

Related Tags :
Next Story