சென்னிமலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; ஆழ்துளை கிணறுகளை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


சென்னிமலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; ஆழ்துளை கிணறுகளை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் ஆழ்துளை கிணறுகளை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னிமலை,

ஈரோடு வீரப்பம்பாளையம் ரோடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாக கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார்கள் சென் றன. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் 2 தனியார் நிறுவனங்கள் அனுமதியின்றி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அந்த 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர்.

மேலும் அதன் அருகில் இருந்த மற்ற 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அனைவரும் அனுமதியின்றி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்பவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விற்பனை செய்வதற்கு அரசு உடனே லைசென்ஸ் வழங்குவதாக இருந்தால் அதை நாங்கள் பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அப்படி எதுவும் வழங்காத நிலையில், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைப்பதை கண்டித்து நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

Next Story