கே.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம்: ‘ஹவாலா’ முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது பெங்களூரு போலீஸ் கமிஷனர் ‘பகீர்’ தகவல்


கே.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம்: ‘ஹவாலா’ முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது பெங்களூரு போலீஸ் கமிஷனர் ‘பகீர்’ தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

கே.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ‘ஹவாலா‘ முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் ‘பகீர்‘ தகவல் கூறினார்.

பெங்களூரு, 

கே.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ‘ஹவாலா‘ முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் ‘பகீர்‘ தகவல் கூறினார்.

சூதாட்டம்

கர்நாடக பிரிமீயர் லீக்(கே.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூதாட்டம் தொடர்பாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அஷ்பாக் தாராவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 30-க்கும் அதிகமான வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சூதாட்ட தரகரான பாவேஷ் பக்னா என்பவரை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சன்யாம் என்ற சூதாட்ட தரகரை போலீசார் தேடிவருகிறார்கள். இவர்கள் பல்லாரி ‘டஸ்கர்ஸ்‘ அணியின் பந்து வீச்சாளர்களை தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும்படி வலியுறுத்தியதும், அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஹவாலா‘ பணப்பரிமாற்றம்

இந்த நிலையில் கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்றதோடு, ஹவாலா முறையில் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. அதாவது சூதாட்டமானது சர்வதேச அளவில் நடந்துள்ளதும், துபாயில் உள்ள தரகர்களுக்கு ஹவாலா முறையில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் கே.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தொடர்பு உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் மும்பை, டெல்லி நகரங்களுக்கு சென்றுள்ளனர்.

Next Story