வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி சாதுக்கள் உண்ணாவிரதம்


வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி சாதுக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:15 AM IST (Updated: 6 Oct 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி கடலூரில் சாதுக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கடலூர்,

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியவரும் ஜீவகாருண்யத்தை போதித்தவருமான வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி பிறந்தார். அவரது பிறந்த தினமான நேற்று வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதுக்கள் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

வள்ளலார் பிறந்த தினத்தை உலக ஜீவகாருண்ய தினமாக அறிவிக்க வேண்டும், வடலூரை புனித நகரமாக அறிவிக்க வேண்டும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தனித்து இயங்கும் வாரியமாக அறிவிக்க வேண்டும், சிறு தெய்வங்களின் பெயரில் உயிர்பலி இடுவதை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் சாது.சிவகுமார் தலைமை தாங்கினார். வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மண்டல செயலாளர் சக்கர.ராமகிருஷ்ணன் சன்மார்க்க கொடி ஏற்றினார். சங்கத்தின் துணை செயல் பொறுப்பாளர் கணேசன் வள்ளல் பெருமானின் மகா மந்திரத்தை ஓதினார். கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் சக்தி வடிவேல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இப்போராட்டத்தில் ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் அகில பாரத சன்னியாசி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா சாதுக்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத் தார். இதற்கான ஏற்பாடுகளை அரிகிருஷ்ணன், முரளிதரன், சீனுவாசன் மற்றும் முருக வேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story