3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கர்நாடகம் வருகை 10-ந் தேதி மைசூரு அரண்மனையை பார்வையிடுகிறார்


3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கர்நாடகம் வருகை 10-ந் தேதி மைசூரு அரண்மனையை பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வருகை தருகிறார். வருகிற 10-ந் தேதி அவர், மைசூரு அரண்மனையை பார்வையிட உள்ளார்.

பெங்களூரு, 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வருகை தருகிறார். வருகிற 10-ந் தேதி அவர், மைசூரு அரண்மனையை பார்வையிட உள்ளார்.

அரண்மனையை பார்வையிடுகிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். வருகிற 10-ந் தேதியில் இருந்து 12-ந் தேதி வரை அவர் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வருகிற 10-ந் தேதி மைசூருவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அன்றைய தினம் மைசூரு அரண் மனையை பார்வையிடுகிறார். மேலும் மறைந்த மைசூரு மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையாரின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ள உள்ளார்.

மறுநாள் (11-ந் தேதி) மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஷ்வரா கோவிலுக்கும், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கும் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அன்றைய தினம் மைசூரு மாவட்டம் வருணாவில் தனியார் கல்வி குழுமம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி பெங்களூரு வருகை

பின்னர் 12-ந் தேதி மைசூருவில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெங்களூருவுக்கு வருகிறார். அன்றைய தினம் பெங்களூரு கவர்னர் மாளிகையில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுடன் அவர் பேச உள்ளார். அதன்பிறகு, மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமாரின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவியை சந்தித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச இருக்கிறார்.

அன்றைய தினம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனியில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அனுசாந்தனா சன்ஸ்தனா பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்கிறார். பின்னர் பெங்களூருவில் இருந்து அவர் அகமதாபாத்திற்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

Next Story