கர்நாடக அரசின் கஜானா காலியாக வாய்ப்பு இல்லை சித்தராமையா பேட்டி


கர்நாடக அரசின் கஜானா காலியாக வாய்ப்பு இல்லை சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் கஜானா காலியாக வாய்ப்பு இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மங்களூரு, 

கர்நாடக அரசின் கஜானா காலியாக வாய்ப்பு இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

வாய்ப்பு இல்லை

முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடக அரசின் கஜானா காலியாக உள்ளதாகவும், எப்படி காலியானது என்றும் தெரியவில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசின் கஜானா காலியாகி விட்டதாக விஜயேந்திரா கூறி உள்ளார். அவருக்கு ஞானம் உள்ளதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் வரி வசூல் ஆகிறது. இதனால் கர்நாடக அரசின் கஜானா காலியாக வாய்ப்பு இல்லை. மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

பாசிச ஆட்சி

மத்தியில் பிரதமர் மோடி பாசிச ஆட்சி நடத்தி வருகிறார். அவர் மீது யாரும் குறை கூட கூற முடியாத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிதி கேட்டு இருந்தோம். ஆனால் மத்திய அரசு ரூ.1,500 கோடி தான் ஒதுக்கி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தலா ரூ.50 ஆயிரம்

இதையடுத்து அவர் கார் மூலம் புறப்பட்டு சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு சென்றார். அங்கு நிவாரண நிதி கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளான சென்னப்பகவுடா, சந்திரப்பகவுடாவின் வீடுகளுக்கு சென்ற சித்தராமையா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் 2 பேரின் குடும்பங்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.

Next Story