கும்பகோணம் அருகே மனைவிக்கு கத்திக்குத்து கணினி மைய உரிமையாளருக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே மனைவியை கத்தியால் குத்தியதாக கணினி மைய உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆண்டலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது35). கணினி மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீரா (22). கடந்த சில மாதங்களாக கஜேந்திரன்-மீரா இடையே குடும்ப தகராறு நடந்து வந்தது. இதனால் மீரா கணவரிடம் கோபித்துக்கொண்டு கும்பகோணம் மேலக்காவிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கஜேந்திரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த மீராவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மீரா, கஜேந்திரனுடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மீராவின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மீராவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஜேந்திரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story