வண்டலூர் பூங்காவில் வன உயிரின மாரத்தான் ஓட்டம்


வண்டலூர் பூங்காவில் வன உயிரின மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2019 10:15 PM GMT (Updated: 5 Oct 2019 8:10 PM GMT)

வண்டலூர் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வுக்காக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வண்டலூர்,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வண்டலூர் பூங்காவில் வன உயிரின பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வுக்காக 5 கி.மீ. தூரத்திற்கு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு ‘வண்டலூர் உயிரியல் பூங்கா வன ஓட்டம்’ எனப் பெயரிட்டு வன உயிரின பாதுகாப்பிற்கான ஓட்டமாக நேற்று காலை 7 மணிக்கு நடத்தப்பட்டது. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதன் முறையாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் முனைவர் பெ.துரைராசு முன்னிலை வகித்தார். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், இயக்குநர் யோகேஷ் சிங் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்றார்கள். மேற்கண்ட தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story