மோடி- ஜின்பிங் வருகை மாமல்லபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு


மோடி- ஜின்பிங் வருகை மாமல்லபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2019 10:15 PM GMT (Updated: 5 Oct 2019 8:20 PM GMT)

தமிழக பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினருடன் வந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்துரதம், கடற்கரை கோவில் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் அவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடிக்கும், சீன அதிபருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் அளிப்பது குறித்தும், அவர்கள் சுற்றிப்பார்க்கும் இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க.வினருடன் வந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்துரதம், கடற்கரை கோவில் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் மாநில செயலாளர் கே.டி.ராகவன், மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், சாய் சுரேஷ், மாவட்ட தலைவர் செந்தமிழ்அரசு, மாமல்லபுரம் நகர தலைவர் எம்.ஸ்ரீதர், இந்து முன்னணி நகர நிர்வாகிகள் வி.பாபு, என்.கே.சுரேஷ் மற்றும் பலர் வந்திருந்தனர்.

Next Story