மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆரேகாலனி பிரச்சினை தீர்க்கப்படும் உத்தவ் தாக்கரே சொல்கிறார்


மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆரேகாலனி பிரச்சினை தீர்க்கப்படும் உத்தவ் தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 9:32 PM GMT)

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆரேகாலனி பிரச்சினை தீர்க்கப்படும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை, 

மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆரேகாலனி பிரச்சினை தீர்க்கப்படும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மரம் வெட்ட அனுமதி

மும்பை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்காக ஆரேகாலனியில் சுமார் 2 ஆயிரத்து 700 மரங்கள் வெட்டப்பட உள்ளது. இந்த மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது என சமூகஆர்வலர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் மும்பை ஐகோர்ட்டு அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் ஆரேகாலனியில் மரங்களை வெட்ட மெட்ரோ நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து மும்பை மெட்ரோ கழகம் போலீஸ் பாதுகாப்புடன் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியது. இதில் மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

பிரச்சினை தீர்க்கப்படும்

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

ஆரேகாலனி விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை ஆகும். அந்த பிரச்சினையை நாங்கள் அப்படியே விட்டுவிட மாட்டோம். அங்கு என்ன நடந்தது என்பதை பற்றி கேட்டு தெரிந்து கொள்வேன். மேலும் ஆரே காலனி பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசுவேன். எங்களின் ஆட்சி மீண்டும் நிச்சயமாக வரும் என உறுதியாக கூறுகிறேன். அதன்பிறகு ஆரேகாலனி பிரச்சினை தீர்க்கப்படும். மரங்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story