முறைகேடு வழக்கில் கைதான பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனருக்கு 17-ந் தேதி வரை போலீஸ் காவல்
முறைகேடு வழக்கில் கைதான பி.எம்.சி. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரை 17-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
முறைகேடு வழக்கில் கைதான பி.எம்.சி. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரை 17-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
வங்கி முறைகேடு
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு முதல் ரூ.4 ஆயிரத்து 355 கோடியே 46 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்து உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் செயல்பாடுகளை முடக்கியது. இதுகுறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், பி.எம்.சி. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ஜாய் தாமசையும் நேற்றுமுன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீஸ் காவல்
நேற்று போலீசார் ஜாய் தாமசை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 17-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே எச்.டி.ஐ.எல் நிறுவன இயக்குனர்களான ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன் ஆகியோர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story