கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த மாற்றம் தேவை ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பேட்டி


கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த மாற்றம் தேவை ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த மாற்றம் தேவை என்று ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த மாற்றம் தேவை என்று ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

காங்கிரஸ் மேலிடம் முடிவு

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ., பெங்களூருவில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் நான் எனது கருத்தை எடுத்துக் கூறியுள்ளேன். என்னை போல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும்.

சித்தராமையாவின் பெயர்

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சித்தராமையாவின் பெயர் அடிபடுகிறது. எச்.கே.பட்டீல், பரமேஸ்வர் ஆகியோர் அந்த பதவிக்கு போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

Next Story