திருவாரூரில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் காரணமாக ஏராளமானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 72 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 சிறுமிகள் உள்பட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பிரிவு
டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொசுவலை வசதியுடன் படுக்கை வசதி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story