சத்துணவு கூடத்தில் சமைக்கும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் பாரதி எம்.எல்.ஏ., அறிவுரை


சத்துணவு கூடத்தில் சமைக்கும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் பாரதி எம்.எல்.ஏ., அறிவுரை
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தை பாரதி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

கொள்ளிடம்,

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தை பாரதி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். சத்துணவு கூடத்தில் உள்ள சமையல் பாத்திரங்கள் சுத்தமாக உள்ளதா? அனைவருக்கும் முட்டைகள் வழங்கப்படுகிறதா? உணவு சுகாதாரமாக சமைக்கப்படுகிறதா? என்பதை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த சத்துணவு ஊழியர்களிடம் எம்.எல்.ஏ. கூறுகையில், சமைக்கும் போது முழு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். சமைத்த உணவை முறையாக மூடி வைக்க வேண்டும். உணவை சமைப்பதற்கு முன்பு அரிசியை வெந்நீரில் முழுமையாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும் என்றார். இதில் சீர்காழி கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் நற்குணன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story