ஆத்தூர் அருகே மரத்தில் கார்மோதி நகைக்கடை அதிபர் பலி
ஆத்தூர் அருகே மரத்தில் கார் மோதி நகைக்கடை அதிபர் பலியானார். தனது 60-வது பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கினார்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் நகைக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வந்தவர் நாகமணி சேகர் (வயது 60). இவருடைய மனைவி சுகந்தி (53).
60-வது பிறந்தநாளையொட்டி நாகமணி சேகர் தனது குடும்பத்துடன் கும்பகோணம், திருக்கடையூர் கோவில்களுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நாகமணி, சுகந்தி, மகள்கள் பவித்ரா, துர்கா, மருமகன்கள் கார்த்திகேயன், சந்தோஷ் பிரபு, 2½ வயது குழந்தை ஆகியோருடன் கும்பகோணம், திருக்கடையூருக்கு சென்றனர்.
விபத்து
அங்கு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை மூத்த மருமகன் கார்த்திகேயன் ஓட்டினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலை அருகே நேற்று அதிகாலை 2.45 மணியளவில் வந்தபோது சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் முன்பக்க இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்த நாகமணி சேகர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
மற்ற 6 பேரும் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story