போக்குவரத்து விதிகளை மீறிய 4 ஆயிரம் பேர் மீது வழக்கு; ரூ.4 லட்சம் அபராதம் வசூல்


போக்குவரத்து விதிகளை மீறிய 4 ஆயிரம் பேர் மீது வழக்கு; ரூ.4 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 9 Oct 2019 3:30 AM IST (Updated: 8 Oct 2019 2:31 PM IST)
t-max-icont-min-icon

போளூர் உட்கோட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

போளூர், 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.குணசேகரன் மேற்பார்வையில் போளூர், கலசபாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 1,368 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் பின்னால் உட்கார்ந்து பயணித்த 575 பேர் மீதும், கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்த 991 பேர் மீதும், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 386 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 172 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் 3 பேராக பயணம் செய்த 111 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 72 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றி சென்ற வாகனம், உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய பல்வேறு குற்றத்திற்காக மொத்தம் 4 ஆயிரத்து 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30–ந் தேதி வரை 9 மாதங்களில் 21 ஆயிரத்து 606 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 18 ஆயிரத்து 140 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தெரிவித்து உள்ளார்.

Next Story