பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பிடிபட்டது
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
நெல்லை,
ஒரு தொகுதிக்கு ஒரு பறக்கும் படை என 10 தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரு தொகுதிக்கு கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சண்முக சுந்தரம் என்பவர் இருந்தார். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் இருந்தது. அவற்றை பறக்கும் படை தாசில்தார் ராஜசேகரன் பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story