விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் நகை–பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை –பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி அனுசுயா (வயது 75). இவருக்கு 6 மகன்கள். இவர்கள் அனைவரும் வெளியூர்களில் தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுசுயா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக செஞ்சியில் உள்ள தனது 2–வது மகன் தங்கராசு வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அனுசுயா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்து திடுக்கிட்டு, உடனே அனுசுயாவிற்கும், அவரது மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story