ஸ்ரீபெரும்புதூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சாவு
ஸ்ரீபெரும்புதூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நுஷ்ரத் நகரை சேர்ந்தவர் இக்பால். இவரது மகள் மொகரின் பாத்திமா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி மொகரின் பாத்திமாவுக்கு 2 நாட்களுக்கு முன்னர் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமியை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு பரிதமாக இறந்தார்.
சிறுமி மர்ம காய்ச்சலுக்கு இறந்ததை தொடர்ந்து சிறுமி வீட்டருகே சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மருத்துவர் அருண்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து வீடு வீடாக சென்று ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் அந்த பகுதியை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொகரின் பாத்திமா மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story