மைசூரு தசரா ஊர்வலம் கோலாகலம்; சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்தூவி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கலைக்குழுக்களின் நடனம், அலங்கார வண்டிகள் அணிவகுப்புடன் மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலமாக தொடங்கியது. அர்ஜூனா யானையின் மீது தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர் தூவி தசரா ஊர்வலத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
மைசூரு,
கர்நாடகத்தில் நடைபெறும் வரலாறு சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மைசூரு தசரா முக்கியமானதாகும்.
மைசூரு தசரா உலக புகழ்பெற்றது. ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி அன்று தொடங்கி விஜயதசமி வரை 10 நாட்கள் வரை தசரா விழா நடைபெறும். தசரா விழாவுக்கு வரலாற்று சிறப்புள்ளது. அதாவது, கி.பி.1610-ம் ஆண்டு விஜயநகர சமஸ்தானத்தில் விஜயநகரை ஆண்ட மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் தசரா விழா நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்ச மன்னர்களால் மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில் பழமை மாறாமல் வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வீழ்த்தியதை நினைவுக்கூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மைசூரு தசரா விழா இந்த ஆண்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி சாமுண்டி மலையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை கன்னட எழுத்தாளர் பைரப்பா, வெள்ளித்தேரில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவுவதன் மூலமாக தொடங்கி வைத்தார். இது 409-வது தசரா விழாவாகும்.
தசரா விழா தொடங்கிய நாள் முதல் மைசூரு முழுவதும் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இளைஞர் தசரா, பெண்களுக்கான தசரா, விளையாட்டு போட்டிகள், விமானப்படை வீரர்களின் சாகசங்கள், மல்யுத்தப் போட்டி இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள், கன்னட நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்பு சவாரி ஊர்வலம் தான். இந்த ஆண்டுக்கான ஜம்பு சவாரி ஊர்வலம் திட்டமிட்டப்படி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள நந்தி தூணுக்கு நேற்று மதியம் 2.30 மணி அளவில் சிறப்பு பூஜைகளை செய்து முதல்-மந்திரி எடியூரப்பா கலாசார ஊர்வலத்தையும், பாரம்பரியத்தை நினைவுகூறும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பையும் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கும் அலங்கார வண்டிகள் வந்தன. அத்துடன் கர்நாடகத்தின் கலாசாரத்தை சித்தரிக்கும் கிராமிய நடனக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வந்தனர்.
இதில் 50 கலைக்குழுவினரும், 40 அலங்கார வண்டிகளும் பங்கேற்றன. கலைக்குழுவினரின் நடனமும், இசையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதற்கு முன்பு அரண்மனை வளாகத்தில் அமைந்திருக்கும் பன்னி மரத்திற்கும், அங்குள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து எடியூரப்பா வழிபட்டார்.
கலாசாரம் மற்றும் அலங்கார வண்டிகளின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னதாக நேற்று காலை மைசூரு அரண்மனை வளாகத்தில் இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் முன்னிலையில் மல்யுத்தப்போட்டி நடைபெற்றது. இதில் 4 ஜோடிகள் கலந்துகொண்டனர். இதில் மொட்டை அடித்த வீரர்கள் கையில் ஆயுதத்துடன் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருடைய தலையில் ரத்தம் வந்ததும் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளவரசர் யதுவீர் பரிசு வழங்கினார்.
அதன்பின்னர், இளவரசர் யதுவீர், வெள்ளி ரதத்தில் அமர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள புவனேஸ்வரி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பன்னி மரத்திற்கு அவர் கலாசார முறைப்படி சிறப்பு பூஜைகளை செய்தார். இதையடுத்து இளவரசர் யதுவீர், தர்பார் ஹாலுக்கு சென்று தர்பார் நடத்தினார். நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து சுமார் அரை மணி நேரம் அவர் தர்பார் நடத்தினார்.
இதற்கிடையே சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜைகள் செய்தார். அதனைதொடர்ந்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமக்க அதில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். பின்னர் தங்க அம்பாரியை சுமந்துகொண்டு அர்ஜூனா யானை மற்ற யானைகளின் புடைசூழ சரியாக மாலை 4.15 மணியளவில் அரண்மனை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகில் வந்து நின்றது. அங்கு வைத்து முதல்-மந்திரி எடியூரப்பா, தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 3 முறை மலர் தூவி, ஜம்புசவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். எடியூரப்பாவுடன் மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா, இளவரசர் யதுவீர், கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து அர்ஜூனா யானை உள்பட ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும் தும்பிக்கைகளை தூக்கி வண்ணம் செலுத்தின. அதன்பின்னர் 21 பீரங்கி குண்டுகள், பட்டாசுகள், போலீசாரின் பேண்டு வாத்திய இசை ஆகியவை முழங்க அர்ஜூனா யானை தலைமையில் ஜம்புசவாரி ஊர்வலம் கம்பீரமாக தொடங்கியது. போலீசாரின் அணிவகுப்பு, குதிரைப்படை, ஓட்டகங்கள் ஆகியவை முன்செல்ல, அவற்றை தொடர்ந்து அர்ஜூனா யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கம்பீரமாக நடைபோட்டு சென்றது. அதைத்தொடர்ந்து மற்ற யானைகளும் ஊர்வலமாக வந்தன. இந்த தசரா ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கே.ஆர்.சர்க்கிள், சயாஜிராவ் ரோடு வழியாக பன்னி மண்டபத்தில் உள்ள தீப்பந்து மைதானத்தை சென்றடைந்தது. அதுவரையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அர்ஜூனா யானை தலைமையில் அனைத்து யானைகளும் அணிவகுத்து சென்றன. மேலும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பல்வேறு கலைக்குழுவினரும் ஆடி, பாடிய படியும், சாகசங்களை செய்தபடியும் சென்றனர். இந்த ஜம்புசவாரி ஊர்வலத்தை சாலையில் இருப்புறங்களிலும் அமர்ந்து லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். அத்துடன் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் செல்பி படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தீப்பந்து மைதானத்தை ஊர்வலம் சென்றடைந்ததும், அங்கு போலீசாரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெய்சிலிர்க்க வைத்த அந்த சாகச நிகழ்ச்சிகளை பார்த்து அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பின்னர் பிரமாண்ட முறையில் வாணவேடிக்கை நடைபெற்றது. வாணவேடிக்கை முடிந்ததும் 10 நாட்களாக கோலாகலமாக நடந்த தசரா விழா நிறைவடைந்தது.
ஜம்புசவாரி ஊர்வலத்தையொட்டி மைசூருவில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை 30-க்கும் மேற்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story