மாவட்ட செய்திகள்

பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு + "||" + Female suicide; The tragic outcome of a family dispute

பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு

பரங்கிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு
பரங்கிப்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38), தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா(32). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்– மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமதாசுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதில் மனமுடைந்த மஞ்சுளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளாவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமதாஸ், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.