தொடர் விடுமுறையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது
தொடர் விடுமுறையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே சுற்றுலா தலமான பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பின்பும் இந்த அரண்மனை தற்போது கேரள கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனையை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் எராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கேரள பாரம்பரியமிக்க சின்னங்கள் அதிக அளவில் இருப்பதால் வெளிமாநிலம், வெளிநாடு மக்கள் அதிக அளவு வருவது வழக்கம்.
குறிப்பாக விடுமுறை காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
சுற்றுலா பயணிகள்
தற்போது ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இதுபோல், சுற்றுலா தலமான கன்னியாகுமரி, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

Related Tags :
Next Story