சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
தாழம்பூர் அருகே சாப்ட்வேர் நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் தாழம்பூர் அடுத்த போலச்சேரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தரமணியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். வீட்டில் அவரும், அவரது மனைவியும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினோத்குமார் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு மனைவியுடன் சென்றார்.
அங்கிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தாழம்பூர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story