மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது + "||" + A knife threatened in Mayiladuthurai 4 arrested

மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது

மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது
மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.


விசாரணையில் அவர்கள், தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), செந்தில்நாதன் (35), திருவிழந்தூர் பெருமாள்கோவில் வடக்கு வீதியை சேர்ந்த வெங்கடகிரு‌‌ஷ்ணன் (22), கலைஞர் காலனியை சேர்ந்த சுரே‌‌ஷ் (32) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த வழியாக சென்ற கூறைநாடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800-ஐ வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், செந்தில்நாதன், வெங்கடகிரு‌‌ஷ்ணன், சுரே‌‌ஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் அசோகன். சம்பவத்தன்று இவர் கல்லாவி அருகே கொல்லப்பட்டியில் ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.
2. தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. ஈரோட்டில் கொரோனா பரவ காரணமான மேலும் 4 பேர் கைது
ஈரோட்டில் கொரோனா தொற்று பரவ காரணமான தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. மேட்டூர் அருகே, பாலியல் தொல்லையால் 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது செங்கல் சூளை உரிமையாளர் கைது
மேட்டூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காரணமாக குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.