மாவட்ட செய்திகள்

செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி + "||" + The public is unable to pay the electricity bills at the Chengapatti Electricity Office

செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி

செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி
3 நாட்களாக அரசு தொடர் விடுமுறையால், தடைப்பட்டிருந்த நிலையில் நேற்று பணம் செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு சென்றபோது பணம் செலுத்தும் அறை சாத்தப்பட்டிருந்தது. மின் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சுற்றுப்புற பகுதிகளான அன்னவாசல், காலாடிப்பட்டி, சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, கீழக் குறிச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இங்குதான் மின்கட்டணம் செலுத்துவது வழக்கம். இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மின்கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அரசு தொடர் விடுமுறையால், தடைப்பட்டிருந்த நிலையில் நேற்று பணம் செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு சென்றபோது பணம் செலுத்தும் அறை சாத்தப்பட்டிருந்தது. மின் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் பணம் செலுத்த வேண்டும் என கூறியபோது மின்வாரிய அலுவலர்கள் நேற்று இந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இங்கு வசூல் செய்யப்படவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. கடைசிநாளான நேற்று மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும், வெளியில் தனியார் நிறுவனங்களில் பணம் செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என புலம்பி கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பி சென்று தனியார் நிறுவனங்கள் மூலம் பணம் செலுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கவும், கூடுதல் தொகையுடனே தனியார் மையத்தில் மின்கட்டணத்தை செலுத்தினோம். பல ஆயிரக்கணக்கான இணைப்புகளுடன் இயங்கும் இந்த அலுவலகத்தில் ஜெனரேட்டர் அல்லது இன்வெட்டர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் பொதுமக்கள் மிகவும் அலைக்கழிக்கப் படுகின்றனர் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி
சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது. ஆனால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
2. பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை: நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை
பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தியாகதுருகம் அருகே ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கொரோனா நோயாளி குணமடைந்ததால் கட்டுப்பாட்டு பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா
கொரோனா நோயாளி குணமடைந்ததால் அரியாங்குப்பத்தில் கட்டுப்பாட்டு பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கடலூரில் தற்காலிக கடையில் மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதல்
கடலூரில் தற்காலிக கடையில் மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.