மாவட்ட செய்திகள்

திருச்சியில் அஞ்சல் வார விழா தொடக்கம் + "||" + Commencement of Postal Week in Trichy

திருச்சியில் அஞ்சல் வார விழா தொடக்கம்

திருச்சியில் அஞ்சல் வார விழா தொடக்கம்
திருச்சியில் அஞ்சல் வார விழா தொடங்கியது.
திருச்சி,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9-ந்தேதி உலக அஞ்சல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இந்தியாவில் அஞ்சல் வார விழா ஒரு வார காலம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் நேற்று நடந்த அஞ்சல் வார விழாவை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


இந்த விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது அஞ்சல் துறை எனக்கு பேருதவியாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை தபால் மூலம் பெற்று படித்தேன். இன்று என்னிடம் 32 பேர் ஆராய்ச்சி மாணவர்களாக படித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் வழிகாட்டி வருகிறேன் என்றால் எனது வெற்றிக்கு இந்திய அஞ்சல் துறை தான் காரணம் என்றார்.

படகு மூலமும் சேவை

மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் பேசுகையில் அஞ்சல் துறை வெறும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் துறையாக மட்டும் இன்றி கால மாற்றத்திற்கு ஏற்ப தகவல் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி கண்டு உள்ளது. மழை, வெயில் என எந்த இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் தபால் துறையினர் தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் படகு மூலம் தபால் சேவை நடந்து வருகிறது. மலைப்பிரதேசங்களில் நடந்து சென்றும் தபால்கள் வினியோகம் செய்யப்படுகிறது என்றார்.

அஞ்சல் உறை வெளியீடு

இந்த விழாவில் அஞ்சல் அட்டை சேவை தொடங்கி 140 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு அஞ்சல் உறையை சுமதி ரவிச்சந்திரன் வெளியிட அதனை தொழில் அதிபர் மதன் பெற்றுக்கொண்டார்.

மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ், உதவி இயக்குனர் சாந்தலிங்கம், அதிகாரிகள் கணபதி, சுவாமிநாதன், தபால் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அஞ்சல் துறை உதவி இயக்குனர் மைக்கேல் ராஜ் நன்றி கூறினார்.

மாணவிகள் ஊர்வலம்

முன்னதாக சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தபால் சேவை பற்றிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தபால் சேவை எப்படி நடக்கிறது என்பது பற்றி அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். மேலும் 140-வது அஞ்சல் அட்டை தின விழாவை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவிகள் தபால் அட்டைகளை அஞ்சல் பெட்டியில் போட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. நவராத்திரி நிறைவு விழாவையொட்டி 10 கோவில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை
நவராத்திரி நிறைவு விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 10 கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. பெரம்பலூரில் கோவில்கள்- மழலையர் பள்ளிகளில் விஜயதசமி விழா
பெரம்பலூரில் உள்ள கோவில்கள்- மழலையர் பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
3. கோவிந்தா கோஷம் முழங்க பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4. கன்னியாகுமரியில் கோலாகலம் பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா
கன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழாவில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5. 520 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர்- எம்.எல்.ஏ. நடத்தினர்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...