வைராவிளையில் ரூ.7 லட்சத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி விஜயகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்


வைராவிளையில் ரூ.7 லட்சத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி விஜயகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:15 PM GMT)

வைராவிளையில் ரூ.7 லட்சத்தில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு விஜயகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குளச்சல் அருகே சைமன் காலனி ஊராட்சி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாணியக்குடி மீனவர் கூட்டுறவு சங்கம் கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு வாணியக்குடி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் இயேசுதாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எனல்ராஜ் முன்னிலை வகித்தார். புனித யாக்கோபு ஆலய பங்குத்தந்தை ஆன்ரோ வினோத்குமார் கட்டிடத்தை ஆசிர்வதித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் சைமன்காலனி முன்னாள் பஞ்சாயத்து தவைர் பிதலீஸ், விசைப்படகு சங்க தலைவர் அல்போன்ஸ், குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரியரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீர் தேக்க தொட்டி

இதேபோல் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் லவ்லின் மேபா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நாகர்கோவில் தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வைராவிளை பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் வைராவிளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story