மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உடல்நிலை மோசமானதால் கட்டிட தொழிலாளி தற்கொலை + "||" + Suffering from cancer Due to poor health of mother Building worker suicide

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உடல்நிலை மோசமானதால் கட்டிட தொழிலாளி தற்கொலை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உடல்நிலை மோசமானதால் கட்டிட தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சின்னத்தாய் (53). இவர்களுடைய மகன் மீனன் (31). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தாயின் மீது அதிக பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் சின்னத்தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரை குடும்பத்தினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சின்னத்தாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், நேற்று முன்தினம் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர்.


இதனால் மனமுடைந்த மீனன் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் பெற்றோர் தூங்கிய பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் தங்களுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த மீனனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உடல்நிலை மோசம் அடைந்ததால், மகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.