மாவட்ட செய்திகள்

வேப்பூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி + "||" + Near Vepur, From the motorcycle Fallen The conductor kills

வேப்பூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி

வேப்பூர் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலியானார்.
வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வேப்பூரில் இருந்து நாரையூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வேப்பூர் கூட்டுரோடு அருகே சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எள் செடி குவியல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மணிகண்டன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.