மாவட்ட செய்திகள்

கடலூர் முதுநகர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி + "||" + Motorcycle collision on a lorry, near Mudunagar, Cuddalore; Electrician kills

கடலூர் முதுநகர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி

கடலூர் முதுநகர் அருகே, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி
கடலூர் முதுநகர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர் தன்ராஜ். இவருடைய மகன் திலிப்குமார் (வயது 21). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். செம்மங்குப்பம் தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக திலிப்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான திலிப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தன்ராஜ் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.